- ரோமர் 12: 1
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. - கொலோசெயர் 3: 15
தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். - பிலிப்பியர் 4: 7
அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். - யோவான் 10:10
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நான் அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். - 1 பேதுரு 5:8
தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். - யோவான் 10:28-29
28. நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
29. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
- 2 கொரிந்தியர் 5:8
நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். - 1 பேதுரு 2:11
பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, - பிலிப்பியர் 3:20
நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். - Romans 12:1
I beseech you therefore, brethren, by the mercies of God, that you present your bodies a living sacrifice, holy, acceptable to God, which is your reasonable service. - Colossians 3:15
And let the peace of God rule in your hearts, to which also you were called in one body; and be thankful. - Philippians 4:7
and the peace of God, which surpasses all understanding, will guard your hearts and minds through Christ Jesus. - John 10:10
The thief does not come except to steal, and to kill, and to destroy. I have come that they may have life, and that they may have it more abundantly. - 1 Peter 5:8
Be sober, be vigilant; because your adversary the devil walks about like a roaring lion, seeking whom he may devour. - John 10:28-29
28. And I give them eternal life, and they shall never perish; neither shall anyone snatch them out of My hand.29. My Father, who has given them to Me, is greater than all; and no one is able to snatch them out of My Father’s hand.
- 2 Corinthians 5:8
We are confident, yes, well pleased rather to be absent from the body and to be present with the Lord. - 1 Peter 2:11
Dearly beloved, I beseech you as strangers and pilgrims, abstain from fleshly lusts, which war against the soul; - Philippians 3:20
For our citizenship is in heaven, from which we also eagerly wait for the Savior, the Lord Jesus Christ,
